"நான் உன்னை பார்க்கும் போது, நீ மண்ணை பார்க்கிறாய்
நான் விண்ணை பார்க்கும் பொது, நீ என்னை பார்க்கிறாய்"
பிரிவோம் என்பதை அறிந்தே
காதல் புரிந்தோம்
கற்பனை உணர்ச்சி தானே?
ரசித்தோம் சிரித்தோம் அழுதோம்
நட்பு என்று சொல்ல மனமில்லை..
நம் பிரிவு சோகமில்லை
நீ சுகமாய் வாழும் வரை...
நம் நினைவுகளை சேர்த்திருக்கிறேன்
பின் ஒரு நாள் பார்த்தால்
பிரித்து காட்ட காத்திருக்கிறேன்..
அப்போது நம் காதல் கொச்சையாய்
உனக்கு தோன்றலாம்
தோன்றினாலும் சொல்லிவிடாதே...
உணர்ச்சிகளை விலைக்கு வாங்க முடியாது...