
உன்னை என் கண்கள்
கண்டதில் இருந்து
நீ தான் என் உலகமென
நினைத்திருந்தேன் நான்
உன்னோடு காலை மாலை
கதைப்பதில் உலகையே
சுற்றிவந்த ஒரு கெளரவம்
அனுதினமும் நான்
பார்ப்பதில் ரசிப்பதில்
கேட்பதில் எங்கும் நீ
எல்லாம் நீயாகவே
நிறைந்திருந்தாய்
வேறுபெண்களுடன்
கதைக்காதே என
கூறியவள் நானேதான்
அன்பே உன்னில் நான்
சந்தேகம் கொண்டல்ல
நான் தரும் பாசத்தை விட
இன்னொருத்தி உன்மேல் பாசத்தை
காட்டி உன்னையும் என்னையும்
பிரித்திடுவாளோ என்ற பயத்தினால்
உன் அருகில் நான்
வாழ ஆசைகொண்டேன்
என் கணவனோடும்
உன் மனைவியோடும் அன்றி
உன்னோடு அல்ல
தினமும் என்னில்
குற்றம் கண்டு கத்துவாய்
வார்த்தைகளால்
வஞ்சித்தாய்
சிலேடை வசனங்களால்
சித்திரைவதை செய்தாய்
அப்போதெல்லாம்
நான் கலங்குவேன்
என் அழுகை கண்டு
எனை மறுகணம்
சிரிக்க வைப்பதற்கே
என் அழுகையை ரசிச்சு
கிச்சு கிச்சு மூட்டுவாய்
உரிமையின்றி பழகுவதாக
உதறித்தள்ளினாய் ஒருநாள்
உறவென்று ஆனபின் சகோதரனே
உரிமைக்கு ஏது தயக்கம்
உன்னை நான் புரியவில்லை என
நொடிக்கொருதடவை கொக்கரிப்பாய்
அப்போதெல்லாம் பிரிய நினைப்பேன்
மறுபடி உன்மடியே
கதி என முண்டியடித்து
ஓடி வருவேன்
ஏனெனில்
எனக்கிருக்கும் ஓர் உறவு
நீதான் என் செல்லமே..
No comments:
Post a Comment